--- --:--:-- --

நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

2

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில் நீலகிரியில் சில இடங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஏற்கனவே ஐந்து நாளாக மழை பெய்து கொண்டிருந்த நிலையில் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் இருப்பதால் கனமழை பெய்யக்கூடும் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon