--- --:--:-- --

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் யாரும் நினைத்து பார்க்காத தண்டனை – அமித்ஷா

3

டெல்லி செங்கோட்டைப் பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே நவ.10 (திங்கள்கிழமை) இரவு 7 மணியளவில் வெள்ளை நிற ஹூண்டாய் கார், பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில்13-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து டெல்லி காவல்துறையினர் விசாரித்துவந்த நிலையில் இந்த வழக்கின் தீவிரத் தன்மையை கருத்தில் கொண்டு விசாரணை தேசிய புலனாய்வு முகமை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், போலீசார் கூட்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, ஆப்ரிக்க நாடுகளுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு டெல்லியில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.

 

Right Menu Icon