--- --:--:-- --

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை..!

4

வம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.நேற்று மட்டும் ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை உயர்ந்தது. காலையில் கிராமுக்கு ரூ.110 உயர்ந்த நிலையில் மாலையிலும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்தது.

 

கடைசியாக மாலையில், 22 காரட் தங்கம் இன்று மாலை கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,480க்கும், சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 91,840க்கும் விற்பனை செய்யப்பட்டது.தொடர்ந்து இன்று (நவம்பர் 11) தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1000க்கும் மேல் அதிரடியாக உயர்ந்து நகை பிரியர்களை வாயை பிளக்க செய்துள்ளது.

 

அதன்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 220 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 11,700க்கும், சவரனுக்கு ரூ. 1,760 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ. 93,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.175 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,750க்கும் சவரனுக்கு ரூ.1,400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் அதிரடியாக ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Right Menu Icon