பார்வதியை பங்கமாய் கலாய்த்த விஜய்சேதுபதி..!
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி 30 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. எப்போதும் இல்லாமல் இந்த சீசனில் சமூக வலைதளப் பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் வீடு என்றாலே பிரச்சனைகள் நிறைந்ததாக தான் இருக்கும், ஆனால் சீசன் 9 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் பிரச்சனையா? அல்லது பிரச்சனையில் பிக்பாஸ் வீடா? என்று அறியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பொழுது போக்கிற்காக பிக்பாஸ் பார்த்து வந்த மக்கள் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் மன அமைதி கெட்டுவிடும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.அதாவது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பிக்பாஸ் வீட்டில் பிரச்சனைகள் அரங்கேறி வருகிறது. பிரச்சனைகளை உருவாக்குவதற்கு மூலக்காரணமாக இருப்பதே வி.ஜே.பார்வதியும் திவாகரும் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் இருவர் இல்லாமல் ப்ரோமோ கூட வருவதில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாங்கள் தான் வெளியில் தெரிய வேண்டும் என்று பார்வதியும் திவாகரும் பல வேலைகளை செய்து வருகின்றனர். சரி சாதாரண நேரம் தான் சண்டை போடுகிறீர்கள் டாஸ்க் கொடுத்தாலாவது ஒன்று சேர்ந்து செய்வார்கள் என்று பார்த்தால் அதுவும் இல்லை. டாஸ்க் கொடுத்தாலும் அதிலும் சண்டை தான் போடுகிறார்கள்.
சனிக்கிழமை நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, வி.ஜே.பார்வதியை கலாய்த்த ட்ரோல் வீடியோ சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது. அதில், சண்டை நடக்கும் போது நான் குளிச்சிட்டு இருந்தேன் சார். சண்டையை நான் கண்ணால பார்க்கல என்று பார்வதி சொல்கிறார்.
அதற்கு விஜய் சேதுபதி பார்த்திருந்தால் அந்த சண்டையோட முதல் ஆளே பார்வதியா தான் இருந்திருப்பாங்க. நம்ம இல்லாமல் இந்த குடும்பத்தோட அமைதி கலையிதே. இவங்க அமைதி கலையதுக்கு முக்கியமான ஆளே நாம தானடா என்ன டா இது. மேடம் நீங்க யாருனு எங்க எல்லாத்துக்கும் தெரியும். தெரியாத ஆள்ட போய் இத சொல்லுங்க. கண்ணால சண்டையை பார்க்கவில்லை என்ற ஏக்கம் தெரியுது என்று பார்வதியை விஜய் சேதுபதி பங்கமாக கலாய்க்கிறார்.
அதற்கு பார்வதி, விக்ரம் எல்லா பயங்கரமா டிபென்ஸ் பண்றவரு, அவரு அந்த சண்டையை நிறுத்தி இருக்கலாம். ஏன் எல்லாரும் பயந்து நின்னாங்கன்னு தெரியல. நான் இருந்திருந்தா சண்டையை கண்டிப்பா நிறுத்தியிருப்பேன் என்றார். இதற்கு சண்டை போடும் போது பார்வதி இருந்திருந்தால் மூன்று பேரையும் ஒவ்வொரு சைடும் தூக்கி அடிச்சிருப்பார் என்று மீண்டும் விஜய் சேதுபதி கலாய்க்கிறார்.





