மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..!
அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது. அந்த வகையில் நேற்று முன் தினம் (நவம்பர் 8) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,300க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வார தொடக்கத்தில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,410க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,515க்கும் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 76,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.167க்கும், ஒரு சவரன் ரூ.1,67,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.





