இறங்கிய தங்கம் விலை..!
நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.அக்டோபர் மாதத்தில் தங்கம் விலை அடிக்கடி அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. தொடர்ந்து தீபாவளி பண்டிகைக்கு பிறகே தங்கம் விலை குறைய தொடங்கியது.அந்த வகையில், நேற்று (நவம்பர் 3) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,350க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 90,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது நகை பிரியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.அதன் படி, நவம்பர் 4ஆம் தேதியான இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.11,250க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ. 90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.9,390க்கும், சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 75,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 குறைந்து , ஒரு கிராம் ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.






