--- --:--:-- --

| காலையில் எகிறிய தங்கம் விலை மாலையில் 3 மடங்கு அதிரடி குறைவு..!

2

அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்தே ஏற்றத்தில் இருந்து வந்த தங்கம் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், தீபாவளிக்கு பிறகு கணிசமாக குறைந்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைத் சந்தித்து வருகிறது.

 

அந்தவகையில், சென்னையில் கடந்த 8 ஆம் தேதி ஒரு சவரன் 90 ஆயிரம் ரூபாயைத் தாண்டிய நிலையில், கடந்த 17 ஆம் தேதி ஒரு சவரன் 97 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தைத் தொட்டது. இதற்கிடையே கடந்த சில நாட்களாகவே காலை மற்றும் மாலையில் ஏற்ற இறக்கத்தைத் தங்கம் விலை சந்தித்து வருகிறது.

 

இதன்படி இன்று (அக்டோபர்) காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540க்கும் சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் மாலை 22 காராட் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.320 உயர்ந்த நிலையில் மாலையில் சவரனுக்கு ரூ.1,120 என 3 மடங்கு குறைந்து விற்பனையாகிறது.

 

அதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,4000க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 18 காரட் தங்கம் விலை காலை குறைந்து விற்பனையான நிலையில் மாலையில் மீண்டும் விலை குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.9,525க்கும், சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.76,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலை மாலை மேலும் 1 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.170க்கும், ஒரு கிலோ ரூ.1,70,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon