பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியை மூட நோட்டீஸ்..!
நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் 7 மாணவர்கள் எலிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை நடத்தினர். சுகாதாரமான வசதிகளை ஏற்படுத்தும் வரை கல்லூரியை மூடுவதற்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு நடத்தியதில், குறைபாடுகள் கண்டறியப்பட்டதால் 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




