பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மோடி உருக்கமான பதிவு
பிலிப்பைன்ஸில் நேற்றிரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி 69 ஆக உயர்ந்துள்ளது. கட்டடங்கள் தரைமட்டமானதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா பிலிப்பைன்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று பிரதமர் மோடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.






