தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழகம்..!
தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை.
ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் 6 மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.





