--- --:--:-- --

ஜி.எஸ்.டி வரி விதிப்பு.. எந்தெந்த பொருள்களுக்கு எவ்வளவு வரி..?

6

கேக், பிஸ்கட் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பாஸ்தா, மக்ரோனி, நூடுல்ஸ் போன்ற பொருட்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை, நிறமூட்டி, சக்கரை கட்டிகளுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

AC, TV, Monitor,projector மற்றும் பாத்திரம் கழுவும் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 28%-லிருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. சமைக்க தயார் நிலையில் உள்ள மீன்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மீன்களுக்கான வரி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. டயப்பர், நாப்கின்ஸ், பீடிங் பாட்டில், பாத்திரங்கள், தையல் இயந்திரங்களுக்கு ஜிஎஸ்டி வரி 12%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

 

விவசாய இயந்திரமான டிராக்டர் டயர்ஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த மேப்ஸ், சார்ட்ஸ், க்ளோப், நோட் புக்ஸ், ரப்பர், பென்சில் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon