--- --:--:-- --

திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி காத்திருக்க தேவையில்லை..!

3

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதியில் இருக்கும் பெரிய பிரச்சனையே ஏழுமலையானை காண மணிக்கணக்கில் காத்திருப்பது தான். பக்தர்கள் கூட்டம் அதிகரித்தால், சில சமயங்களில் 24 மணி நேரம் வரைக்கும் பக்தர்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

 

இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையானை விரைவாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்தித்த, தேவஸ்​தான அறங்​காவலர் குழு தலை​வர் பி.ஆர்​.​நா​யுடு, முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு ஆலோ​சனைப்​படி, கடப்பா மாவட்​டம், ஒண்​டிமிட்டா ஸ்ரீ கோதண்​ட​ராமர் கோயி​லில் நித்ய அன்​ன​தானம் வழங்​கப்​படு​கிறது.

 

இதற்​காக திருப்​பதி தேவஸ்​தானம் ரூ.4 கோடி ஒதுக்​கீடு செய்​துள்​ளது. கடந்த ஜெகன் ஆட்​சி​யில் திரு​மலை​யில் அவரது கட்​சிக்​காரர்​கள் 12 பேருக்கு ஓட்​டல்​கள் ஒதுக்​கப்​பட்​டன. இந்த ஒதுக்​கீடு ரத்து செய்​யப்​பட்​டு, இ-டெண்​டர் மூலம் ஓட்​டல்​களை ஒதுக்கி உள்​ளோம்.

 

ஸ்ரீவாணி அறக்​கட்​டளை தரிசன நேரத்தை மாற்றி உள்​ளோம். காலை​யில் டிக்​கெட் பெற்ற பக்​தர்​களுக்கு அன்று மாலை சுவாமி தரிசனம் கிடைத்து விடும். ஏழு​மலை​யானை பக்​தர்​கள் விரை​வாக தரிசனம் செய்ய ஏஐ தொழில்​நுட்​பம் பயன்​படுத்​தப்​படும். இதன் மூலம் ஏழு​மலை​யானை 1 முதல் 2 மணி நேரத்​துக்​குள் பக்​தர்​கள் தரிசனம் செய்​ய​லாம். இதற்​கான ஏற்​பாடு நடை​பெற்று வரு​கிறது.

 

ஏழு​மலை​யான் தரிசனம், பிர​சாத விற்​பனை தொடர்​பாக சைபர் குற்​றங்​கள் நடை​பெற்று வரு​கிறது. இதனை தடுக்க திரு​மலை​யில் சைபர் செக்​யூரிட்டி லேப் தொடங்​கப்பட உள்​ளது என தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon