--- --:--:-- --

மதுரை தவெக மாநாட்டில் இவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை..!

2

மதுரையில் நடைபெற உள்ள தவெகவின் மாநில மாநாட்டை ஒட்டி பல்வேறு கட்டுப்பாடுகளை அக்கட்சி வெளியிட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் 2-வது மாநில மாநாடு வருகிற 21 ஆம் தேதி மதுரை பாரபத்தியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

 

மாநாட்டில் மொத்தமாக ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தவெக தலைமை விதித்துள்ளது.
அதன்படி, மாநாட்டில் கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் குழந்தைகள் பங்கேற்க அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

 

மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்கப்படுவதால் பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. 200 அடி அகலத்தில் தவெக தலைவர் விஜய் நின்று பேசும் மேடை, ஒன்றரை லட்சம் நாற்காலிகள், 100-க்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகள், 400 தற்காலிக கழிப்பறைகள், 50-க்கும் மேற்பட்ட எல்இடி திரைகள் ஆகியவை அமைக்கப்படுகின்றன.

 

மேலும், தேவைக்கேற்ப சிசிடிவி கேமராக்கள் , 420 ஒலிபெருக்கிகள், 20 ஆயிரம் மின்விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. மாநாட்டில் கலந்து கொள்பவர்களுக்கு இம்முறை பாஸ் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாநாடு முடிந்து வெளியேறுவதற்காக 18 வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

 

பாதுகாப்புக்காக தனியார் பாதுகாவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon