ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிப்பு..!
தங்கக் கடத்தல் வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், கன்னட நடிகை ரன்யா ராவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு கன்னட திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி 14.8 கிலோ தங்கத்துடன் அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) கைது செய்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




