--- --:--:-- --

மறைந்த சரோஜா தேவியின் உடல் இன்று நல்லடக்கம்..!

1

மிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்டோருக்கு இணையாக சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருந்த சரோஜா தேவி தனது 87 வயதில் காலமானார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள வீட்டில் சரோஜா தேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது மறைவுச் செய்தி அறிந்த நடிகர்-நடிகைகள், திரை மற்றும் அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சரோஜா தேவிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

வாள் போன்ற கண்ணழகி என அனைவராலும் வர்ணிக்கப்பட்ட சரோஜா தேவி, தன் இறப்புக்கு பின்னர் கண்களை தானமாக வழங்க விரும்பினார். அதன்படி பெங்களூரு நாராயணா நேத்ராலயா மருத்துவமனைக்கு சரோஜா தேவியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

சரோஜா தேவி மறைவுக்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ் திரையுலகில் நடிகர்கள் அர்ஜுன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

அப்போது பேசிய நடிகர் கார்த்தி, “நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்தாலும் இப்போது அவர்கள் இல்லாததால் எங்களால் முழு சந்தோஷம் அடையவே முடியாது. சரோஜா தேவி அம்மாவை மிகவும் மிஸ் பண்ணுவோம்.” என்று வருத்தத்துடன் கூறினார்.

அதேபோல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சரோஜா தேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார். அதேபோல், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் சரோஜா தேவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் சரோஜா தேவிக்கு இரங்கல் தெரிவித்து நடிகர் சத்யராஜ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என அனைவராலும் அழைக்கப்பட்ட சரோஜா தேவியின் உடல் தெற்கு பெங்களூரு ராம்நகராவில் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது. கர்நாடக அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Right Menu Icon