நாவாய் அருங்காட்சியகத்துக்கு கிராம மக்கள் எதிர்ப்பு..!
நாவாய் அருங்காட்சியகத்தை மண்டபம் பகுதியில் அமைக்க வேண்டாமென அழகன்குளம் மக்கள் வலியுறுத்துகின்றனர். அழகன்குளத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி பணிகளில் 13,000 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதனை வைத்து மண்டபம் பகுதியில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அழகன்குளம் மக்கள், தங்களது பகுதியிலே அமைத்தால் தங்களது வாழ்வதாரம் பெருகும் என்கின்றனர்.





