--- --:--:-- --

ரயில் நிலையத்தில் மைக்கை ஆஃப் செய்ய மறந்த பெண் ஊழியர்..!

1

ரயில் நிலையங்கள் ரயில் வரும்போது அறிவிப்புகளை மைக் மூலமாக வெளியிடுவது வழக்கம். பொதுவாக ரயில் நிலையங்களில் அதிக சத்தம் இருக்கும் என்பதால் மைக் மூலமாக அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். ரயில் வரும் நடைமேடைகள், ரயில் வரும் நேரம், பயணிகள் கவனமாக இருங்கள், உங்கள் பைகள் மற்றும் பணப்பைகளை கவனித்துக் கொள்ளுங்கள் என்ற அறிவிப்புகள் ரயில் நடைமேடையில் அறிவிக்கப்படும்.

 

ஆனால் லக்னோவின் சார்பாக் நிலையத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பு எதிர்பாராத நகைச்சுவை நிகழ்ச்சியாக மாறியது. ஒரு பெண் ரயில்வே ஊழியர் தனது அறிவிப்பு மைக்ரோஃபோனை அணைக்க மறந்துவிட்டார். இது பின்னர் நிலையத்தில் நின்றவர்களிடமிருந்து சிரிப்பை வரவழைத்தது.

 

அந்த பெண் ஊழியர் மைக்கில் பேசிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரயில் நிலையத்தில் திடீரென்று நிலைய ஒலிபெருக்கியில் ஒரு குரல் எதிரொலித்தது. அது ஒரு சாதாரண அறிவிப்பாகத் தொடங்கியது. பயணிகளே, தயவுசெய்து கவனியுங்கள்.

 

அறிவிப்பு அங்கேயே நின்றுவிட்டது. அதை தொடர்ந்து பெண் ஊழியர் பேசிய ஆடியோ மைக்கில் வெளியானது. இதை எதிர்பார்க்காத பயணிகள் முதலில் குழப்பத்தில் ஆழ்ந்தனர். பின்னர் முழு ஆடியோவை கேட்ட பயணிகள் சிரிப்பில் ஆழ்ந்தனர்.அந்த பெண் மைக்கில் சக ஊழியரிடம் பேசும் போது, எவ்வளவு மோசமான ஆண், ஒரு பெண்ணை எப்படி பார்க்கிறார் என்று இந்தியில் பேசியுள்ளார்.

 

இந்த வீடியோவில் அந்த பெண் பேசிய ஒரு பகுதி மட்டுமே இருந்தாலும் அவர் தொடர்ந்து அப்போ குடும்பம் என்னை இந்த வேலையைச் செய்யச் சொல்கிறது என்றும் அவர் பேசினார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 6வது பிளாட்பாரத்தில் இருந்த இரண்டு பெரிய ஒலிபெருக்கிகள் அந்தப் பெண்ணின் கருத்துக்களை சொல்வது வீடியோவில் இடம் பிடித்துள்ளது.

 

சோசியல் மீடியாவில் இந்த வீடியோவிற்கு கலவையான கருத்துகளை நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon