தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பில்லை.. வெப்பம் மேலும் அதிகரிக்கும்..!
தமிழ்நாட்டில் ஜூன் 24 ஆம் தேதி வரை கன மழைக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கணித்துள்ளது.
மேற்கு வங்காள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்று ஜார்க்கண்ட் வழியாக நகரக்கூடும் என கூறியுள்ள வானிலை மையம், தமிழ்நாட்டில் ஜூன் 24 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், இன்று ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரக் கூடும் என்றும் இதனால் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் ஒரு சில இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொறுத்தவரையில், இன்று ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




