ஒரே நாளில் தங்கம் விலையில் இரண்டு முறை மாற்றம்..!
வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் இரண்டு முறை மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதனிடையே, வாரத்தின் தொடக்க நாளான இன்று காலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,950-க்கும், சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,365-க்கும், சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,920-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் வெள்ளி விலை மாற்றமெதுமின்றி, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், இன்று பிற்பகலில் தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று (ஜூன் 2) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9060-க்கும், சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,420-க்கும், சவரனுக்கு ரூ. 440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலை மாற்றமெதுமின்றி, ஒரு கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ ரூ.1,11,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




