டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..!
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு விண்ணிப்பிக்கும் அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. தமிழ்நாடு அரசில் காலியாக உள்ள விஏஓ, இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக்காப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு 3935 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வை டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.
10 ஆம் வகுப்பு தகுதி கொண்ட இப்பணியிடங்களுக்கு, ஜூலை 12 ஆம் தேதி ஒரே கட்ட எழுத்துத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு குறைந்தபட்சம் 21 வயதில் இருந்து அதிகபட்சமாக 41 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இதே போன்று, மற்ற பதவிகளுக்கு 18 வயது முதல் 34 வயது வரையிலும், வனக்காப்பாளர் பணிக்கு 37 வயது வரையிலும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்றுடன் அவகாசம் நிறைவடைகிறது.
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.





