--- --:--:-- --

தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறதா..?

1

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

 

அதில், வீரியம் இல்லாத கொரோனா என்றும், கட்டுப்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ் என்பதாலும் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கொரோனா தொற்று குறைவாக இருக்கக்கூடிய நிலையில், கடந்த முறை நோய் தொற்று பரவாமல் இருப்பதற்காக எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் இம்முறையும் எடுக்கப்பட்டுள்ளது.

 

உலக சுகாதார துறை அமைப்பு (WHO) மற்றும் மத்திய அரசு தென்னிந்தியாவில் பரவக்கூடிய கொரோனா தொற்றுக்கு எச்சரிக்கை மட்டுமே விடுத்திருக்கக்கூடிய நிலையில் எவ்வித புதிய கட்டுப்பாடும் விதிக்க கூறவில்லை.மேலும் கடந்த கொரோனா தொற்றின்போது முகக் கவசம் அணிவது, சம்பந்தப்பட்ட வீட்டிற்கு நேரடியாக சென்று தொற்று பாதித்த நபரை அழைத்து வருவது? தடுப்புகளை வைத்து தெரு மற்றும் வீட்டு பகுதியை அடைப்பது உள்ளிட்ட எவ்வித கட்டுப்பாடும் பொது சுகாதாரத்துறை மூலம் விடுக்கப்படவில்லை.

 

சமூக வலைதளங்களில், கொரோனா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகவும், இதனால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளதாகவும் தவறான தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் முற்றிலும் தவறானது என்றும் சுகாதாரத்துறை மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை எந்த செய்தியும் உண்மை இல்லை எனவும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon