தவெக சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் எப்போது வழங்கப்படும்..?

டிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நீலாங்கரை தனியார் மண்டபத்துக்கு அழைத்து பரிசுகள் வழங்கி வருகிறார்.

 

அந்த வகையில், மூன்றாவது ஆண்டாக, மாணவர்களுக்கு பரிசு வழங்க, அவர்களை தேர்வு செய்வதற்கான பணிகளை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது.மாவட்ட வாரியாக மாணவ – மாணவிகளின் பட்டியலை வழங்கும்படி மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுரை வழங்கி உள்ளார்.

 

மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த தமிழக வெற்றி கழகத்தினர் ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பரிசுகள் வழங்கும் விழா, அடுத்த மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.