பிரபல நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா..!

பாலிவுட் நடிகை நிகிதா தத்தாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது தாயாருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இருவரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

இந்த தகவலை அவரே இன்ஸ்டாவில் வெளியிட்டு, அனைவரும் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். கோல்ட், கபீர் சிங், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற பாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நிகிதா நடித்துள்ளார்.