ஒரே நாளில் இருமுறை தங்கம் விலையில் மாற்றம்..!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 2 முறை குறைந்தது. இதனால் நேற்று மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2,360 குறைந்ததால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு உலக பொருளாதார சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பால், உலகம் முழுவதும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் உருவாகி தங்கம் விலை மேலும் உயர்ந்தது.இதையடுத்தும் இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றமும் தங்கம் விலையில் எதிரொலித்தது. இந்த நிலையில் தான் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று 2 வது முறையாக குறைந்துள்ளதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
மேலும் தங்கம் விலை குறையலாம என்று கூறப்படுகிறது. இதனிடையே நேற்று (மே 12) 22 காரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் விலை ரூ.8750-க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.70,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று (மே 13) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.8765-க்கும், சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.7220-க்கும், சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.57,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,09,000க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி இன்று (மே 13) 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.8855-க்கும், சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.70,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் விலை ரூ.7300-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.109க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ,1,09,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




