கூடுதல் சுங்கச்சாவடி அமைக்க தொழில் தீர்ப்பாயம் அனுமதி
சுங்கச்சாவடிகளுக்கு இடையே துணை சுங்கச்சாவடிகளை அமைக்கலாம் என தொழில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு உள்நுழையும் வாகனங்கள் கட்டணங்கள் செலுத்துவதை தவிர்ப்பதற்காக சுங்கச்சாவடிகளுக்கு இடையே அமைந்திருக்கும் மாற்றுப் பாதையை தேர்வு செய்கின்றனர். இதனால் அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.
எனவே பிரதான சுங்கச்சாவடிகளுக்கு இடையே கூடுதலாக சுங்கச்சாவடி அமைக்கக்கோரி தனியார் ஒப்பந்ததாரர்கள் தொழில்துறை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் குறிப்பிட்ட தேசிய நெடுஞ்சாலை வழித்தடத்தில் கூடுதல் சுங்கச்சாவடி அமைக்கலாம் என அனுமதியளித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் தொழில் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மேல்முறையீடு செய்ய உள்ளது. ஒவ்வொரு தேசிய நெடுஞ்சாலை கிலோ கூடுதலாக சுங்கச்சாவடி அமைத்தால் குழப்பங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. முன்னதாக புதுச்சேரி திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கூடுதலாக சுங்கச்சாவடி உருவாக தொழில் தீர்ப்பாயம் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.





