பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக பஞ்சாபில் 2 பேர் கைது!
இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு கசியவிட்ட குற்றச்சாட்டின் பேரில் பஞ்சாபில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ராணுவத்தின் கண்டோன்மெண்ட் பகுதிகள் அமிர்தசரஸில் உள்ள ஏர்பேஸ் உள்ளிட்ட தகவல்களை பாலக் ஷெர் மாஸி, சூரஜ் மாஸி ஆகிய இருவர் பாக். – க்கு வழங்கியுள்ளதாக பஞ்சாப் மாநில டிஜிபி கவுரவ் யாதவ் தகவல் தெரிவித்துள்ளார்.






