ஆணவக்கொலை செய்ய மனமில்லாத தந்தையின் முடிவு..!
ம.பி.யில் தனது மகள் வேறொரு சாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்ததால், தந்தை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குடும்ப மானத்தை வாங்கிய மகளையும், அவரது கணவனையும் கொல்ல வேண்டும், ஆனால் என் மகளை எப்படி கொல்வேன் என தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னதாக தந்தை எழுதி வைத்த கடிதம் சிக்கியுள்ளது. மேலும், கோர்ட்டில் வாதாடி வென்ற வக்கீலுக்கு குடும்பம் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.






