ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை.. வங்கிகள் செயல்படாது..!
தமிழ்ப் புத்தாண்டு மற்றும் அம்பேத்கர் ஜெயந்தியையொட்டி ஏப்.14-ம் தேதியான இன்று வங்கிகள் செயல்பாடுகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி மத்தியப் பிரதேசம், நாகாலாந்து, சத்தீஸ்கர், மேகாலயா மற்றும் இமாசலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் வங்கிகள் செயல்படுமா? என்ற குழப்பம் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ளதால், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகளுக்கு இன்று (ஏப்.14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் வங்கி சேவைகளை விடுமுறையைக் கவனத்தில் கொண்டு திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், தனிநபர்களுக்கான தொகையை அனுப்புவது. ஏடிஎம். இணைய வங்கி, வங்கி செயலிகள் போன்றவை மூலம் பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.






