பிரபல நடிகர் கலைப்புலி ஜி.சேகரன் காலமானார்..!
பிரபல நடிகரும், இயக்குநருமான கலைப்புலி ஜி.சேகரன் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன், உளவாளி, ஜமீன் கோட்டை உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர், 2000-ல் திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவரான பிறகு சினிமாவில் விநியோகஸ்தர்களின் குரலை ஓங்கச் செய்தவர். ஜி.சேகரன் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






