என்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்: ராமதாஸ்
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கியதை அடுத்து, ராமதாஸை சமாதானப்படுத்த மூத்த நிர்வாகிகள் முயன்று வருகின்றனர். ஆனால், அன்புமணியை சந்தித்துவிட்டு வந்தவர்களை அவர் காண மறுத்து வருகிறார்.
இதனால் தைலாபுரத்தில் காத்திருந்த மூத்த நிர்வாகிகள் ஏமாற்றமடைந்தனர். இந்தச் சூழலில் பாமகவிற்கு தானே தலைவர், தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என ராமதாஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.





