மே 9 வெற்றி தின அணிவகுப்பு; மோடிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இந்தியா வருவார் என்பதை உறுதி செய்த பிறகு, மாஸ்கோ தற்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்யா வெற்றி தின அணிவகுப்பைப் பார்வையிட அழைப்பு விடுத்துள்ளது.
இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனியை ரஷ்யா வென்றதன் 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் மே 9 ஆம் தேதி கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ தெரிவித்தார்.
அழைப்பு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது, மேலும் வருகைக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன என்று ஆஅண்ட்ரி ருடென்கோ கூறியதாக ரஷ்ய செய்தி நிறுவனமான டாஸ் குறிப்பிட்டுள்ளது. “பயணம் திட்டமிடப்பட்டு வருகிறது, இந்த ஆண்டு அது நடக்க வேண்டும். அவருக்கு அழைப்பு உள்ளது,” என்று ஆண்ட்ரி ருடென்கோ செவ்வாயன்று கூறினார்.
இந்த ஆண்டு வெற்றி தின அணிவகுப்பில் கலந்து கொள்ள பல நட்பு நாடுகளின் தலைவர்களை ரஷ்யா அழைத்துள்ளதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.





