--- --:--:-- --

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் உடலுக்கு அரசு மரியாதை..!

2

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவரும், தமிழிசை சௌந்தரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன், உடல்நலக்குறைவால் சென்னை வானகரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

மருத்துவக் குழுவினர் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர். அதன்பிறகு, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் குமரி அனந்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குமரி அனந்தன் நேற்றிரவு காலமானார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் “மறைந்த இலக்கியச் செல்வர் குமரி அனந்தனின் திருவுடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர். இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் மறைவுற்ற செய்தியை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேதனையும், வருத்தத்தையும் தெரிவித்துள்ளதோடு, மறைந்த குமரி அனந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

 

நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழ்ச் சமுதாயத்திற்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணியாற்றிய அப்பா குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ‘தகைசால் தமிழர்’ கடந்த ஆண்டு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Right Menu Icon