ரேஷன் கடை ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்!
PDS-க்கு தனித் துறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ரேஷன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளனர்.
பல துறைகளின் கட்டுப்பாட்டில் ரேஷன் கடைகள் இயங்குவதால் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகவும், இதனைக் களைய வேண்டும் என அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் கருப்புச் சட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இதனால், ரேஷன் கடைகள் இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




