வரி விதிப்பை நிறுத்தும் திட்டமில்லை: டிரம்ப்
உலக அளவில் பங்குச்சந்தைகள் வீழ்ச்சியடைந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதிப்பை தற்காலிகமாக நிறுத்துவார் என பேசப்பட்டது. ஆனால், அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. அதே சமயம் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் நாடுகளுடன் பேசுவதற்கு தயாராகவே இருக்கிறோம். இஸ்ரேல் பிரதமர் ஏற்கெனவே இது பற்றி விவாதித்தார். இந்தியாவும் பேசி வருகிறது என்றார்.





