--- --:--:-- --

தாமிரபரணி ஆற்றில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம்!

5

தாமிரபரணி ஆற்றை நீர் ஆதரமாக கொண்டு 896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

 

ஆலங்குளம் தொகுதியில் உள்ள கடையம் உள்ளிட்ட 163 கிராமங்களுக்கு மற்றும் கீழப்பாவூர் பேரூராட்சிக்கு ஆகியவற்றுக்கான கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அரசு முன்வருமா என்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, இந்த திட்டத்தில் கிராமங்களுக்கு 40 லிட்டர், பேரூராட்சிகளுக்கு 100 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய ஒப்பந்தாரர் இந்த பாராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

எனவே முழுமையாக ஆராயந்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார். மேலும், தாமிரபரணி ஆற்றை நீர் ஆதரமாக கொண்டு 896 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon