குடியிருப்பு பகுதியில் எரிவாயு கசிவால் பயங்கர தீவிபத்து..!
விருதுநகரில், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காலையில் தீப்பிடித்தது. தீயானது அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் பரவியதால், குடிசை வீடுகள் உள்ளிட்ட 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனிடையே, ராஜா என்பவரது வீட்டில் சிலிண்டர் எரிவாயு கசிவால் தீப்பிடித்து, அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




