--- --:--:-- --

சிஎஸ்கே – டெல்லி போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை!

3

சென்னை சேப்பாக்கத்தில் வரும் 5ஆம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்குகிறது. சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதும் போட்டி வரும் 5ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படும் நிலையில், ஒரு நபருக்கு அதிகபட்சமாக 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடந்த கடந்த இரண்டு போட்டிகளில் டிக்கெட் எடுக்க 3 லட்சம் பேர் வரை முன்பதிவு செய்ய ஆன்லைனில் காத்திருந்தனர்.

 

இதனால், சிஎஸ்கே – மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே – பெங்களூரு இடையேயான போட்டிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டும் சிறிது நேரத்திலேயே விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon