--- --:--:-- --

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் யாரைச் சந்திக்கிறார்?

2

மாநில சுயாட்சியை உறுதி செய்ய மாநில உரிமைகளை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியும் காக்க முடியும். தமிழினத்தை உயர்த்த முடியும் என்பதை உறுதிபட தெரிவித்து அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என தெரிவித்தார். சட்டப்பேரவையில் இருமொழிக் கொள்கை தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய முதலமைச்சர், தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை என்றும் அதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

 

இது பண பிரச்னை அல்ல; இன பிரச்னை என்று கூறிய முதலமைச்சர், நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெரும் கொத்தடிமைகள் தாங்கள் அல்ல என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிப்பதில்லை என்பதால்தான், இரு மொழிக் கொள்கையை கடைபிடிப்பதாகக் கூறினார்.

 

தமிழ் மொழியை அழிக்க முயற்சி நடப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ள முதலமைச்சர், இதற்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்றும் சூளுரைத்துள்ளார். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால் தான் இது போன்ற மொழி திணிப்புகளையும், அநீதிகளையும் மத்திய பாஜக அரசு செய்வதாக சாடிய முதலமைச்சர், நாட்டின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்கள் சுயாட்சி வென்றெடுக்கவும், மிக சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், “பா.ஜ.க-வைத் தவிர பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் இருமொழிக் கொள்கை குறித்து தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த விஷயத்தில் எப்போதும் உறுதியாக இருப்போம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி உதயகுமார் பேசும்போது உறுதியளித்திருக்கிறார்.

 

அதேநேரம் இன்று காலை நம் எதிர்க்கட்சித் தலைவர் டெல்லிக்குச் சென்றிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறது. யாரைச் சந்திக்கப் போகிறார் என்ற அந்த செய்தியும் வந்திருக்கிறது. அப்படிச் சந்திக்கும் நேரத்தில், இருமொழிக் கொள்கை குறித்து வலியுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்.” எனக் கேட்டுக்கொண்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon