தமிழகத்தில் மேலும் 2 நகராட்சிகளை மாநகராட்சியாக உயர்த்த திட்டம்..!
தமிழகத்தில் மேலும் 2 நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்த முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். மேலும் ஓக்கேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், கரூர், திருச்சி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட்ட 16 திட்டங்களை 14,875 கோடியில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் மீதான விவதாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தொடரில் நகராட்சி நிர்வாகத்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே என் நேரு வெளியிட்டார். அதன்படி நகரகங்களாக வளர்ந்து வருவதில் இந்தியாவில் தமிழகம் முண்ணனி மாநிலமாக உள்ளது. பல்வேறு அடிப்படை உட்கட்டமைப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
சார்பு நிறுவனங்கள் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டு காலத்தில் 10 மாநகராட்சி, 31 நகராட்சிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடியில் மதிப்பில் சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ரூ.1564 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.900 கோடியில் புதிய சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.830 கோடியில் 1000 நீர் நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளது. ரூ.328 கோடி செலவில் நகர்பற உள்ளாட்சிகளுக்கு அலுவலக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. 8285 வாகனங்கள் திடக்கழிவு மேலாண்மைக்கு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பிறப்பு சான்றிதழ் மூலம் பல்வேறு வசதிகள் இணைதளம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.பெரம்பலூர், ராமநாதபுரம் நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது 17,455 கோடியில் 23 குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




