பள்ளியை சுற்றி வந்த மர்ம நபர்கள்..!
திண்டுக்கல் அருகே இரண்டாம் வகுப்பு மாணவனை ஸ்கூட்டியில் வந்த இரண்டு பேர் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வரும் சஞ்சீவ் என்ற மாணவனை ஸ்கூட்டியில் வந்த இரண்டு பேர் கடத்தி சென்றுள்ளனர்.
சப்தம் கேட்டதை அறிந்த காவலாளி ஒருவர் அவர்களை தேடி சென்றுள்ளார். அப்பொழுது மாணவனை விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து மாணவன் பள்ளி நிர்வாகத்திடம் தெரியப்படுத்தியும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேற்று ஆம்னி காரில் வந்தவர்கள் மேலும் நான்கு மாணவர்களை கடத்த முயற்சி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பெற்றோர்கள் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.





