இடையூறு ஏற்படுத்துவதாக பிரசாத் ஸ்டூடியோ மீது இளையராஜா புகார்
இசையமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ நிறுவனத்திற்கு எதிராக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச இசையமைப்பாளராக விளங்கும் இளையராஜா பல ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை பயன்படுத்தி வருகிறார். சென்னை சாலிகிராமத்தில் அமைந்திருக்கும் இந்த இடத்தில்தான் பாடல்பதிவு சந்திப்புகள் என அனைத்து பணிகளையும் இளையராஜா மேற்கொள்வார்.
இந்நிலையில் இளையராஜாவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கணினி உள்ளிட்ட அலுவலக பொருட்களை வைத்து அவருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக பிரசாத் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் இளையராஜாவின் உதவியாளர் அளித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




