--- --:--:-- --

டிரெக் தமிழ்நாடு திட்டம் – பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளனர்

3

மிழ்நாடு அரசின் டிரெக் தமிழ்நாடு எனும் மலையேற்ற திட்டத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளதால், பழங்குடியின இளைஞர்கள் பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

தேனி மாவட்டம் குரங்கனி மலைப்பகுதியில், கடந்த 2018-ஆம் ஆண்டு வனத்துறை அனுமதியின்றி மலையேற்றத்திற்குச் சென்ற 23 பேர் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தனர். இதையடுத்து, மலையேற்றத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் விதிகளை உருவாக்கிய தமிழ்நாடு அரசு அதற்காக டிரெக் தமிழ்நாடு எனும் திட்டத்தை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது.

 

அதன்படி, www.trektamilnadu.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து, உரிய கட்டணம் செலுத்தி தமிழ்நாட்டில் இயற்கை எழில் மிகுந்த மலைப் பகுதிகளில் மலையேற்றம் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், தேனி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் 40 இடங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

 

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் Trek Tamil Nadu எனும் மலையேற்ற திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 3 மாதங்களில் 4 ஆயிரத்து 792 பேர் மலையேற்றம் சென்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம், அரசுக்கு, 63 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாகவும், இதில், 49 லட்சம் ரூபாய் வழிகாட்டிகளாக செயல்பட்ட பழங்குடியின இளைஞர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.காட்டுத்தீ பரவும் ஆபத்து காரணமாக ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மலையேற்றம், அதன் பின்னர் தொடங்கும் எனவும், சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Right Menu Icon