ரேஷன் அரிசியில் இனி 10% மட்டுமே குருணை
ரேஷன் அரிசியில் 25% வரை குருணை கலக்க முன்பு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில், அந்த அளவை 15% குறைத்து இனி 10% மட்டுமே ரேஷன் அரிசியில் குருணை கலக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரேஷனில் விநியோகிக்கப்படும் அரிசியில் அதிக குருணை இருப்பதாகவும், தரமில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இம்முடிவினால் இனி ரேஷனில் தரமான நல்ல அரிசி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





