மார்ச் 22-ல் கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு..!
உலக தண்ணீர் தினமான வரும் 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிட்டுள்ளது.
உலக தண்ணீர் தினத்தன்று காலை 11 மணிக்கு கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்ட நிகழ்வுகளை மொபைல் செயலி வாயிலாக உள்ளீடு செய்யவேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.






