அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.






