--- --:--:-- --

இஸ்ரேல் அரசுக்கு ஹமாஸ் அமைப்பினர் பகிரங்க எச்சரிக்கை..!

3

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான எந்த ஒரு இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கையும் பிணை கைதிகள் கொல்லப்படுவதற்கு வழிவகுக்கும் என ஹமாஸ் அமைப்பு எச்சரித்துள்ளது.

 

காசாவில் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பு இடையே தாமதம் ஏற்பட்டுள்ள சூழலில் பிணை கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என இஸ்ரேல் அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேல் அமைப்பு போர் மற்றும் அச்சுறுத்தல்கள் பிணை கைதிகளை விடுவிப்பதை பாதுகாக்காது என தெரிவித்துள்ளது.

 

போரை மீண்டும் தொடங்குவதற்கான அனைத்து சாதுரிய கூறுகளும் தயாராக இருப்பதாக ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. இந்த சூழலில் போர் நிறுத்தம், கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றை பேசி வருவதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். போரில் ஹமாஸ் அமைப்பிற்கு உதவும் எண்ணம் அமெரிக்காவிடம் இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon