10 ஆயிரம் கோடி கொடுத்தாலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்க மாட்டோம்..!
10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும், தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகக் கூறினார்.
கடலூர் மாவட்டம், திருப்பயர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் பெற்றோர்களைக் கொண்டாடுவோம் என்ற விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் அப்பா என்ற செயலியை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மாநட்டின் சிறப்பு மலரை முதலமைச்சர் வெளியிட்டார். பின்னர் அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது . பின்னர் முதலமைச்சர் தனது உரையை தொடங்குவதற்கு முன்னார் நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி பாடலை பாடினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய கல்விக் கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கிற கொள்கை, தமிழுக்கு தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு வேட்டு வைக்கிற கொள்கை எனக் கூறினார். மாணவர்களை பள்ளிகளை விட்டு விரட்டுகிற, துரத்துகிற கொள்கையாக இது உள்ளது எனவும், அதனை ஏற்க மாட்டோம் என்றும் முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




