--- --:--:-- --

ஆள்மாறாட்டம் செய்து போலியான ஆவணத்தை உருவாக்கி மோசடி..!

10

ள்மாறாட்டம் செய்து போலியான ஆவணத்தை உருவாக்கி அதனை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1 கோடி கடன் பெற்ற மூன்று நபர்ளுக்கு தலா மூன்று வருட சிறை தண்டனை மற்றும் அபராதம் தலா ரூ.5000 விதிக்கப்பட்டுள்ளது.

 

திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையத்தைச் சேர்ந்த திரு. வி. சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான நல்லூர் கிராமத்தில் உள்ள 2.32 ஏக்கர் இடத்தை குமரன் ரோட்டில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முயன்ற போது ரூ.4,90,000-க்கு விற்பனை செய்தது போல் கூட்டு சேர்ந்து போலியான ஆவணங்களை தயார் செய்து ஆள்மாறாட்டம் செய்துள்ளனர்.

 

பத்திரத்தை வைத்து குமரன் ரோட்டில் உள்ள கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.1 கோடிக்குக் கடன் பெற்றுள்ளதாக வங்கி நிர்வாகம் கூறியுள்ளது.இது தொடர்பாக்க் கடந்த 05.10.2005 அன்று கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளான ராமகிருஷ்ணன், சிவக்குமார், செல்வராஜ் ஆகியோர் 2005 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 

குற்ற அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்குப்பின் 18.02.2025 குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட ராமகிருஷ்ணன், சிவக்குமார், செல்வராஜ் மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ.5000- விதித்தும் அபராதத்தை செலுத்த தவறினால் ஒரு மாத கால கடுங்காவல் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon