--- --:--:-- --

பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு 2 ஆண்டு சிறை..!

11

பெண்ணை மானபங்கப்படுத்திய வழக்கில் எதிரிக்கு இரண்டு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரம் கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பெரியாண்டிபாளையம், காமராஜ் காலனியில் வசிக்கும் பெண்ணை அவரது வீட்டின் அருகே வசித்து வரும் தாஸ்(47) என்பவர் மானபங்கப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் 30.01.2024ம் தேதி கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் புகாரளித்தார்.

 

புகாரின் பேரில் கே.வி.ஆர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றவாளியான தாஸ் 31.01.2025 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டும், இவ்வழக்கில் விரைந்து புலன் விசாரணை முடித்தும் குற்ற அறிக்கை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

அந்த வழக்கு இன்று 18.02.2025-தேதி திருப்பூர் மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் அனைத்து தரப்பு சாட்சிகளை முன்னிலைப்படுத்தி விசாரணை முடித்து, நீதிபதி ரஞ்சித்குமார் குற்றவாளியான தாஸ்க்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்தது. அபராதத்தை செலுத்த தவறினால் 2 மாத சிறு தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

இவ்வழக்கினை உதவி அரசு வழக்குரைஞர் பானுமதி திறம்பட நடத்தினார். மேலும் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணையினை விரைந்து நடத்திய கே.வி.ஆர்.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பழனியம்மாள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் பாராட்டபட்டனர்.

Right Menu Icon