தாலியுடன் பள்ளிக்கு வந்த 9ம் வகுப்பு மாணவி..!
கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு 25 வயது இளைஞர் உடன் இரண்டு நாட்களுக்கு முன்பு கோவில் ஒன்றில் பெற்றோர் திருமணம் செய்தது வைத்துள்ளனர். தாலியுடன் மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக குழந்தைகள் நல அலுவலகம் சமூக நலத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் விசாரணை நடத்தி கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்த தச்சு தொழிலாளி அவரது பெற்றோர் என மொத்தம் ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.





